அதிகாலை முதல் விடாமல் ஆட்டம் காட்டும் கனமழை.. திணறி நிற்கும் மக்கள்

Update: 2024-11-17 09:38 GMT

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில், 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே பரவலாக மழை பெய்தது. திருநள்ளாறு, நெடுங்காடு, திருப்பட்டினம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இடைவிடாத மழையால் தள்ளுவண்டி வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் சாலையோரம் கடை வைத்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனிடையே, கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. படகுகள் மீன் இறங்கு தளம் அருகே பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்