30போண்டா செய்ததை தட்டிக்கேட்ட மாமியார்... ஆசிட் குடித்து மருமகள் தற்கொலை அணைக்கட்டு, வேலூர்

Update: 2024-11-17 11:12 GMT

அணைக்கட்டு அருகே உள்ள வரதலம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், பெங்களூருவில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், வீட்டில் மாமியார் கிரிஜாவுடன்,மருமகள் ஆஷாவுக்கு அடிக்கடி சண்டை நடப்பதாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பாக ஆஷா தனது வீட்டில் போண்டா செய்து அதனை அலமாரி மேல் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதனை குழந்தைகளுக்கு எடுத்துக் கொடுத்தபோது, யாருக்கும் தெரியாமல் எப்போது போண்டா செய்தாய்? என்றும், தனது மகன் கஷ்டப்பட்டு சம்பாதித்து வருவதை வீண் செய்யலாமா? என்றும் கேட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆஷா, கழிவறையில் இருந்த ஆசீட்டை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, அவரது உறவினர்கள், அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், ஆஷா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்