JUSTIN || தமிழக எல்லையில் ஆர்ப்பரிக்கும் காவிரி - திடீர் ஆக்ரோஷம்

Update: 2024-11-15 02:41 GMT

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை எதிரொலி தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 5000 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரெட்டி, நாட்ராபாளையம், பிலிகுண்டு, ஒகேனக்கல் வனப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழையை தொடர்ந்து நீர்வரத்து உயர்ந்துள்ளது. 5,000 கன அடியில் இருந்து 7,000 கன அடியாக நீர்வரத்து திடீரென உயர்ந்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக, நீர்வரத்து மேலும் உயர வாய்ப்புள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்