பலத்த மழை காரணமாக, புதுச்சேரி தற்காலிக பேருந்துநிலையம் சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் அவதியுற்றனர். பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பேருந்துநிலையம் சீரமைக்கப்படுவதால், ஏஎப்டி மைதானம் தற்காலிக பேருந்துநிலையமாக செயல்படுகிறது. அந்த பேருந்து நிலையத்தில் சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதியும் இல்லை என பயணிகள் குற்றச்சாட்டினர். தற்காலிக பேருந்துநிலையத்தில் போதிய வசதிகளை புதுச்சேரி அரசு செய்து கொடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.