பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.. கடைசி நேரத்தில் வந்த முக்கிய தகவல் - இந்த Train-அ மிஸ் பண்ணீடாதீங்க

Update: 2025-01-13 06:08 GMT

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இன்று மதியம் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது... சென்னை எழும்பூரில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு மதுரைக்கு ஒரு வழி முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

ரயில் எண் ’06161’ ரயிலானது தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், கூடல் நகர் வழியாக மதுரை ரயில் நிலையம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது... கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முன்பதிவில்லா சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்