நெருங்கும் மாட்டு பொங்கல் - மந்தமான கயிறு விற்பனை.. புலம்பும் வியாபாரிகள்
பொங்கல் பண்டிகை நெருங்கும் சூழலில், மாட்டு பொங்கலுக்கு கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் அலங்கார கயிறு விற்பனை மந்தமாக நடைபெறுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில், அலங்காரக் கயிறுகள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன. சேலம் மாவட்டம் எடப்பாடி, மேட்டூர், அந்தியூர் ஆகிய பகுதிகளில் தயார் செய்யப்பட்ட அலங்கார கயிறுகள், தலை கயிறு, மூக்கணாங்கயிறு, கொம்பு கயிறு, மணி, சலங்கை உள்ளிட்ட விதவிதமான கயிறுகள் விற்பனை செய்யப்பட்டும், போதிய அளவில் விற்பனை நடைபெறவில்லை என வியாபாரிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.