பொங்கல்னா இப்படி இருக்கனும்... காலேஜ் பசங்களுக்கே டஃப் கொடுத்த பள்ளி மாணவர்கள்
நாகப்பட்டினம் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. மாணவ மாணவிகள் பட்டுப்பாவாடை, வேட்டி, சட்டை என புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தாழை, நாணல், செங்கரும்பு நட்டு வைத்து, 100 மண் பானைகளில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கி வந்த போது அனைவரும் பொங்கலோ பொங்கல் என்று கோசமிட்டு, உற்சாகத்துடன் சமத்துவ பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்