மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி போலீஸ் குடும்பம் போராட்டம் - காரணம் இதுதான்

Update: 2024-12-29 02:44 GMT

போளூர் அடுத்த படவேடு மங்களபுரம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார், சென்னையில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர், தனது சொந்த கிராமமான மங்களாபுரத்தில் தனது சகோதரர் ராமசாமி உடன் இணைந்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர், நிலத்தை அபகரிப்பதாக கூறி, கடந்த 2013ம் ஆண்டு முதல் போளூர் வட்டாட்சியர் மற்றும் சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், தங்களது பரம்பரை நிலத்தை மீட்டு தரக்கோரியும், குடும்பத்தோடு, மங்களாபுரம் மேல்நிலை நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார். கையில் பெட்ரோல் கேனுடன் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் இறங்கி வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்