மத்திய அரசு கல்வி நிதி தராவிட்டாலும், மாநில அரசே அதனை ஏற்றுக் கொள்ளும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை வரவேற்பதாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரூபாய் குறியீடு விவகாரம் குறித்தும் பதிலளித்தார்.