இறந்த பெண்ணை அடக்கம் செய்யும் நேரத்தில் காத்திருந்த பேரதிர்ச்சி - ஷாக்கில் ஊர் மக்கள்
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே இறந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடிய நபர் கைது செய்யப்பட்டார். மகேஸ்வரி என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரை அடக்கம் செய்யும்போது கழுத்தில் அணிந்திருந்த தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சடலத்திற்கு மாலை அணிவிப்பது போல் நடித்து தாலி செயினை திருடி சென்ற கொழுந்துவேல் என்பவரை கைது செய்தனர்.