PRIME_TIMEஜல்லிக்கட்டு விறுவிறுப்பு - சீறிப்பாய்ந்த காளைகள்

x

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மேல மைக்கேல்பட்டி கிராமத்தில் புனித அந்தோனியார் ஆலய பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டை, கோட்டாட்சியர் ஷீஜா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். பின்னர் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்