குழந்தையுடன் நடந்து சென்ற பெண்.. முட்டி தூக்கி வீசிய மாடு.. அதிர்ச்சி காட்சிகள்
சென்னை கொளத்தூர் பாலாஜி நகரில் சாலையில் மளிகை கடைக்கு சென்று கொண்டிருந்த தாய் மகள் மீது அதே சாலையில் கன்று குட்டியுடன் வந்து கொண்டிருந்த பசுமாடு திடீரென்று ஆக்ரோஷமாக சிறுமியை முட்ட முயன்றதால் தடுக்கும் முயன்ற தாய் மீது கோபத்தை வெளிப்படுத்தி முட்டி தூக்கி வீசக்கூடிய காட்சி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது மேலும் அப்பகுதி மக்கள் மாட்டினை விரட்டியடித்து தாய் மகளை மீட்டனர் இந்த குறித்து பொதுமக்கள் மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் காலையில் சுற்றித்திரிந்த பசுவை பிடித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர் மேலும் இதுபோன்று சாலை சுற்றி வரும் மாடுகள் சாலையில் செல்ல கூடியவர்களை தாக்கக்கூடிய சம்பவம் அதிகரித்து வருகிறது இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் மாட்டின் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்