மின்னல் வேகத்தில் நேருக்கு நேர் மோதிய பைக். நொடியில் பிரிந்த உயிர்கள் | Pavoorchatram | Thanthitv
பாவூர்சத்திரம் அருகே, இரு சக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் நடந்த இந்த விபத்தில், செட்டியூரை சேர்ந்த பரமசிவன் மற்றும் கருங்குளத்தை சேர்ந்த பீர்முகமது ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். புல்லுக்காட்டு வலசையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் கால் எலும்பு முறிந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.