கிறிஸ்துமஸ் பண்டிகை..! பாதுகாப்பு பணியில் களமிறங்கும் 8000 போலீசார்! | Christmas

Update: 2024-12-24 13:27 GMT

காவல்துறை பணிக்கு உதவியாக ஊர்க்காவல் படையினரும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னையிலுள்ள சுமார் 350 தேவாலயங்களுக்கு சுழற்சி முறையில் காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர் மூலம் கண்காணிக்கவும், விரிவான பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருட்டு உள்ளிட்ட குற்றங்கள் அரங்கேறாமல் இருக்க சிசிடிவி கேமராக்கள், டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கிய சந்திப்புகளில் சிறப்பு வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளவும், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்