கண்ணீருடன் விடைபெற்ற ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் - நெகிழ வைக்கும் காட்சிகள்
கும்பகோணம் அருகே உள்ள பழவத்தான்கட்டளை ஊராட்சி, அடுத்த வாரம் கும்பகோணம் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. இதனால், இனி ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தேர்தல்இருக்காது. இதற்கிடையே தற்போதைய ஊராட்சி நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் 5-ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதால் ,
ஊராட்சியின் கடைசி கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவரின் சேவையை பாராட்டி, கண்ணீர் மல்க விடை பெற்றனர்.