'ஆரஞ்சு அலர்ட்' இந்த 6 மாவட்டங்கள்தான் டார்கெட்.. பறந்த எச்சரிக்கை

Update: 2024-12-16 02:16 GMT

'ஆரஞ்சு அலர்ட்' இந்த 6 மாவட்டங்கள்தான் டார்கெட்.. பறந்த எச்சரிக்கை

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், 18ஆம் தேதி விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்