புதுக்கோட்டை மாவட்டம் கருக்கா குறிச்சி வடக்கு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது நர்சிங் மாணவி, கடந்த மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போனதாக அவரது தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டின் அருகேயுள்ள கிணற்றிலிருந்து மாணவி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சூழலில், மாணவியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக கூறி, தஞ்சை சாலையில் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள், மாணவியை அவரது காதலன் மணிகண்டன் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாக குற்றஞ்சாட்டினர். மேலும், அவரை கைது செய்யும் வரை மாணவியின் உடலை பெறமாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.