- நீலகிரி மாவட்டம் உதகை அருகே, போதிய வகுப்பறைகளை கட்டித்தரக்கோரி, பள்ளி மாணவர்களும், பெற்றோரும் சாலைமறியலில் ஈடுபட்டனர். கல்லட்டி அருகே உள்ள சோலாடா ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 91 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், ஒரே அறையில் 3 வகுப்பு மாணவர்கள் அமர்ந்து படிப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை மனு அ ளித்தும் நடவடிக்கை இல்லாததால் ஆத்திரமடைந்த பெற்றோர், மாணவர்களுடன் கல்லட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசாரும், அதிகாரிகளும் உறுதியளித்ததால், 2 மணிநேரம் நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது.