அறுவடை செய்யும்போதே அதிர்ச்சி - பதறி ஓடி வந்த மக்கள்.. நடு வயலில் பரபரப்பு
நெல்லை மாவட்டம் அம்பை சுற்றுவட்டார பகுதிகளில் நெற்கதிர்களை அறுத்து கொண்டிருந்தபோது திடீரென அறுவடை எந்திரம் தீப்பற்றி எரிந்தது. ஆலங்குளம் செல்லும் சாலையிலுள்ள கோவில்குளம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த விவசாயிகள் ஓடி வந்து கால்வாயில் இருந்து தண்ணீர் மற்றும் வயலில் கிடந்த மண்ணை அள்ளி வீசி தீயை அணைத்தனர்.