நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர் கொலை.. "சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது?" - அன்புமணி ராமதாஸ் சரமாரியாக கேள்வி

Update: 2024-12-21 02:35 GMT

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு எங்கே போய்விட்டது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். நெல்லை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், கொலையைத் தடுக்கத் தவறியது காவல்துறையின் படுதோல்வி.... அதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற மாய உலகில் ஆட்சியாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்றும், அதில் இருந்து வெளியே வந்து சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்க வகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்