நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தந்தை தானமாக அளிக்க நினைத்த சுமார் இரண்டு கோடி மதிப்பிலான நிலத்தை, மகன் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த தொழிலதிபர் ரத்தினலால் நகத்தின் மகன் நரேந்திரகுமார் நகத் மேட்டுக்கடை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான 24 சென்ட் நிலத்தை
நீதிமன்றத்திற்கு தானமாக வழங்கினார். குமாரபாளையம் வட்டாட்சியர் தலைமையில் நிலம் கைமாற்றப்பட்டது.