மின்கம்பத்தில் இருந்து தவறி விழுந்து துடிதுடித்து பலியான மின்வாரிய ஊழியர்.. நாகர்கோவிலில் அதிர்ச்சி
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயிலில், மின் கம்பத்திலிருந்து தவறி விழுந்த மின் வாரிய ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எட்டாமடை பகுதியைச் சேர்ந்த அஸ்வின்குமார், பார்வதிபுரம் மின்பகிர்மான கழக அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், வெட்டூர்ணிமடம் பகுதியில் உள்ள ஒரு கட்டடத்தில் மின் தடை ஏற்பட்டதாக தகவல் வந்ததையடுத்து, அங்கு சென்ற அஸ்வின், மின் கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்துகொண்டிருந்தார். அப்போது, திடீரென நிலைதடுமாறி கிழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உயிரிழந்த அஸ்வினுக்கு திருமணமாகி, 7 மாத கைக்குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.