நாளை முதல்... அமைச்சர் கொடுத்த மாஸ் அப்டேட்
- சென்னை செம்மொழி பூங்காவில் 4வது மலர் கண்காட்சியை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
- 4வது மலர்க்கண்காட்சிக்காக 50 வகையான மலர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளதாக கூறினார்.
- நாளை முதல் 11ம் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது என்று கூறிய அமைச்சர், காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.