நேருக்கு நேர் மோதிய பஸ்..கோவிலுக்கு சென்று திரும்பிய பக்தர்களுக்கு நேர்ந்த கதி...

Update: 2025-01-02 13:59 GMT

செய்யாறு அருகே மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்குச் சென்று திரும்பிய தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு செய்யாறு புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், வில்வநாதன, நிஜந்தன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்