"ஒரு அக்கா குளத்துல குதிச்சிட்டாங்க.." - சிறுவன் சொன்ன வார்த்தை.. தேடியவர்களுக்கு கிடைத்த செய்தி
மயிலாடுதுறை கோவில் குளத்தில் இளம் பெண் ஒருவர் குதித்ததை பார்த்ததாக சிறுவன் கூறியதன் பேரில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பழமை வாய்ந்த ஸ்ரீ கோவில் பிரம்ம தீர்த்த திருக்குளத்தில் நேற்று மாலை 6.30 மணி அளவில் சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவர் ஓடி வந்து குளத்தில் குதித்ததை பார்த்த சிறுவன் ஓடி போய் யானை பாகனிடம் கூறி உள்ளார். பாகன் யானையை கட்டிவிட்டு வருவதற்குள் இளம்பெண் மூழ்கியதாக கூறப்படுகிறது. தகவலறிந்த வந்த தீயணைப்பு படையினர் குளத்தில் குதித்த இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.