மெரினாவில் உண்மையில் என்னாச்சு? - தீயாய் பரவிய வீடியோ.. திடுக் திருப்பம்

Update: 2024-12-12 09:13 GMT

மெரினாவில் மழை நீரால் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளத்தில் பொய்யான தகவலை பரப்பிய அதிமுக நிர்வாகி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தபோது, மெரினாவில் மழை நீரால் மின்கசிவு ஏற்பட்டுள்ளதாக அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார், சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதுகுறித்து மின்சார வாரியம் தரப்பில் விசாரணை மேற்கொண்டதில், அந்த வீடியோ மியான்மரில் நடந்த சம்பவம் என தெரிய வந்தது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் உண்மை அறியும் குழு ஆய்வு மேற்கொண்டு பொய்யான தகவல் பரப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி பல்வேறு சர்ச்சைகளை கிளப்பிய நிலையில், சமூக வலைதளங்களை கண்காணிக்கும் சென்னை காவல்துறை பிரிவு சார்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதைடுத்து, அதிமுக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல் குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே, அவர் அந்த பதிவை நீக்கிய போதிலும், கலவரம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான தகவலை பரப்பியதால் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளவும் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்