"ரத்தம் சிந்தி உழைச்சிருக்கோம்.. எங்க மண்ண விடவே மாட்டோம்''தமிழகத்தையே திரும்ப விட்ட மதுரை..

Update: 2025-01-07 09:14 GMT

மதுரை மாவட்டம் மேலூர் அருகே, டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டக் குழுவினர் மதுரை நோக்கி பேரணி சென்றனர். மேலூரில் இருந்து மதுரை தல்லாகுளத்தில் உள்ள தலைமை தபால் நிலையம் நோக்கி, ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர். மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள், வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த பேரணியில் கலந்து கொண்டனர். பதற்றமான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி பொதுமக்கள் பேரணியில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்