மன உளைச்சலுக்கு ஆளான ஆண் காவலர் தற்கொலை முயற்சி
வேலூர் தெற்கு மற்றும் வேலூர் வடக்கு ஆகிய இரு வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் ஆண் காவலரும், தலைமை பெண் காவலரும் திருமணத்தை மீறிய உறவில் பழகி வருவதாக டி.ஐ.ஜி அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டது. ஆண் காவலரின் மனைவி அளித்த புகாரில் இரு காவலர்களையும், பணியிட மாற்றம் செய்து, டி.ஐ.ஜி தேவராணி உத்தரவுப் பிறப்பித்தார். இது தொடர்பாக டி.ஐ.ஜி தேவராணி, எஸ்.பி-க்கு அனுப்பிய நிர்வாக ரீதியான குறிப்பாணை திடீரென வெளியே கசியவிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குறிப்பாணையில் ஆண் காவலர் மற்றும் பெண் காவலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒழுக்கமற்ற நடத்தை காரணமாக துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கோருதல்,என டி.ஐ.ஜி பதிவிட்டுள்ள வார்த்தைகள் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இதனால் மனஉளைச்சல் அடைந்த ஆண் காவலர்கள் தற்கொலைக்கு முயன்ற நிலையில், வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.