மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு நடிகர் சூரியின் காளையான 'ராஜாக்கூர் கருப்பன்' தயாராகியுள்ளது. காளையுடன் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் வீடியோவை சூரி வெளியிட்டுள்ளார். ரோஜாப்பூ மாலையுடன் கம்பீரமாக அலங்கரிக்கப்பட்ட காளைக்கு, உணவு கொடுத்து, தீபாரதனை காட்டி சூரி அழைத்து வரும் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த காளை 16ஆம் தேதி நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ளது.