மழை வெள்ள பாதிப்புகளுக்கு பிறகு தூத்துக்குடியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. 1754 பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 100 பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. அதேபோல் கனமழையால் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை நடைபெறும் எனவும் பள்ளி கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பு காரணமாக அரையாண்டு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதுடன், தேர்வு விடுமுறையும் முன்கூட்டியே விடப்பட்டது. இந்த நிலையில், 15 நாட்கள் கழித்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது.