குவைத் வேலை இவ்வளவு ஸ்பெஷலா? ஆச்சர்யமூட்டும் ஆரம்ப சம்பளம்..! 1 ரூபாய் செலவு இல்ல..எல்லாமே வீட்டுக்குதான் சித்ரவதையா..? பேச்சுக்கே இடமில்லை

Update: 2024-06-14 06:34 GMT

வெளிநாடு வேலை என ஆசையில் இருக்கும் பலரும் குவைத்தை தேடிச் செல்வது ஏன்? அங்கே உள்ள வேலை என்ன? சம்பளம் என்ன? தமிழர்களை ஈர்க்க முக்கிய காரணமாக சொல்லப்படுவது எது? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

என் மகன் வெளிநாட்டில் வேலை பார்க்குறானுக்கும்.. என பெருமையாக சொல்வோர் ஏராளம்... ஆனால் வெளிநாடு வேலை என்பது சிலருக்கு கனவாக இருக்கலாம்.. ஆனால் பலருக்கு அது கடமையும் கூட...

பிள்ளைகளை கரையேற்ற, வாங்கிய கடனை அடைக்க, தங்கையின் கல்யாணம் என பல்வேறு கடமைகள் பின்னால் இருந்து துரத்தும்... உள்ளூரில் வேலை பார்த்தால் சொற்ப சம்பளம்.. அன்றாட சாப்பாட்டுக்கும், பண்டிகை கால செலவுக்குமே அது போதாது என நினைத்து எப்படியாச்சும் வெளிநாட்டுக்கு போய் நல்லா சம்பாதிச்சு கடனை அடைச்சுடனும் என கிளம்பி செல்வோர் தான் ஏராளம்...

அப்படி வெளிநாடு செல்வோரின் தேர்வுகளில் பிரதான இடத்தில் இருக்கிறது குவைத்... அந்த நாட்டின் பிரமாண்டமே இங்கிருப்பவர்களை ஈர்க்கும்..

அய்யோ.. வெளிநாடா.. ? மொழி புரியாதே என யாரும் பயப்படவே தேவையில்லை.. காரணம் எங்கு பார்த்தாலும் தமிழ் மொழி பேசுவோர் தான் அதிகம் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் ஒரு பகுதி போலவே இருக்கிறது குவைத் என்கிறார்கள் அங்கே வசிப்போர்...

குவைத் செல்ல வேண்டும் என தீர்மானித்தால் அவர்களுக்கு தேவையான ஆவணங்களை தயார் செய்வது, விசா எடுப்பது என அத்தனை வேலைகளையும் சம்பந்தப்பட்ட ஏஜென்சிகளே செய்து கொடுத்து விடுவார்களாம்...

விசா கொடுப்பதிலும் சில நடைமுறைகள் இருக்கிறது... ஆனால் வெளிநாட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கு காதிம் (Khadim) விசா தான் வழங்கப்படுகிறது. அதாவது தோட்டம் மற்றும் வீட்டு வேலை அல்லது டிரைவர் வேலைகளுக்கு செல்வோருக்கான விசா இது.

இந்த விசாவில் செல்ல 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்... இந்த காதிம் விசாவில் தான் இங்கிருந்து தமிழர்கள் பலரும் குவைத் செல்கிறார்கள். இப்படி வீட்டு வேலை, டிரைவர் வேலைகளுக்கு செல்வோருக்கு ஆரம்ப கட்ட சம்பளமே மாதம் சுமார் 110 தினார்களில் ஆரம்பிக்கிறது.

அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் 28 ஆயிரத்தில் ஆரம்பிக்கிறது இவர்களின் சம்பளம்... தங்கும் இடம் மற்றும் உணவு இதில் வராது. எங்கு வேலை பார்க்கிறார்களோ அதே வீட்டில் 5க்கு 5 அல்லது 10 க்கு 10 என்ற அளவில் ஒரு அறையை ஒதுக்கி தந்து விடுகிறார்கள்... அதேபோல் வீட்டில் இருப்பவர்கள் என்ன சாப்பிடுகிறார்களோ அதே உணவு தான் வேலை பார்ப்பவர்களுக்கும்...

அதனால் கையில் வழங்கப்படும் சம்பளத்தை பெரும்பாலும் அப்படியே சேமிப்பு என்ற பெயரில் ஊருக்கு அனுப்பிவிடுவதால் கையில் கணிசமாக பணம் நிற்கும் என நம்புகிறார்கள். இதுவே இங்கிருப்போர் குவைத் தேடி செல்ல முக்கிய காரணமாக இருக்கிறது...

ஆரம்பத்தில் வேலைக்கு செல்வோர் படிப்படியாக அவர்கள் பெறும் அனுபவத்தை பொறுத்து 170 தினார் வரை சம்பளம் கிடைக்குமாம்.. அதாவது சுமார் 60 ஆயிரம் வரை என்கிறார்கள் குவைத்தில் வேலை பார்த்தவர்கள்...

வேலையை பொறுத்தவரை சித்ரவதை என்ற பேச்சுக்கே இடமில்லையாம் குவைத்தில்.. அங்கே 2 தூதரகங்கள் இருக்கிறது. பணியாளர்களுக்கு ஏதேனும் புகார் என்றால் உடனே நடவடிக்கை எடுப்பார்களாம்..

அதேபோல் மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை விடுமுறை கட்டாயம் என நடைமுறை இருக்கிறதாம் குவைத்தில்... ஆனால் பெரும்பாலானோர் இந்த நடைமுறையை பின்பற்றுவதே இல்லை. மாதத்தில் ஒரு வெள்ளிகிழமை அவர்கள் விருப்பப்படி வார விடுமுறையாக எடுத்துக் கொள்ளலாம்...

இதை வீட்டு உரிமையாளர்கள் தான் தீர்மானிக்கிறார்களாம்... வேலை நேரம் எல்லாம் உரிமையாளர்கள் சொல்வதை பொறுத்து தான். இப்படி வேலை தேடி குவைத் வாழ்ந்தவர்கள் சங்கமித்து இருந்த ஒரு இடம் தான் இப்போது தீயால் உருக்குலைந்து பலரின் உயிரை பறித்திருக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்