கடன் வசூலிக்க வந்தவர்களை நாயை வைத்து கொடூரமாக கடிக்க வைத்த பெண்

Update: 2024-12-06 05:28 GMT

கடன் வசூலிக்க வந்தவர்களை நாயை வைத்து கொடூரமாக கடிக்க வைத்த பெண்

வெள்ளலூர் மகாகணபதி நகரைச் சேர்ந்த மணிகண்டன் கடந்த 2020ல் ஒரு ஷோரூமில் ஆறரை லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கியுள்ளார்... 2 லட்சம் முன் பணம் செலுத்தியுள்ளார்... மீதமுள்ள பணத்துக்கு தனியார் நிதி நிறுவனத்தில் மாதம் 6 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தவணை செலுத்ஹ்டும் வகையில் கடன் வாங்கிய நிலையில், மணிகண்டன் 20மாதங்களுக்கு மேல் தவணை செலுத்தவில்லை என கூறப்படுகிறது... இதனால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும் மணிகண்டன் தொகையை செலுத்தாத நிலையில், நிதி நிறுவன ஊழியர் ஜெகதீஷ், கதிரவன், சுரேஷ் ஆகிய மூவரும் மணிகண்டன் வீட்டுக்குச் சென்று அவரது காரை எடுத்துச் செல்ல முயன்றனர்... குறுக்கிட்ட மணிகண்டன், காரில் தனது பொருள்கள் சில இருப்பதாகவும் அவற்றை எடுத்து விட்டு தருவதாகவும் கூறி தான் வைத்திருந்த சாவியைக் கொண்டு காருக்குள் சென்று, கண்ணிமைக்கும் நேரத்தில் சட்டென காரை ஓட்டிச் சென்று விட்டார்... இதனால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், மணிகண்டன் மனைவி பிரியா திடீரென தன் வீட்டு நாயை ஏவி விட்டு 3 பேரையும் கடிக்க சொல்லி கட்டளையுட்டார்... ஜெகதீஷ் மீது பாய்ந்த நாய் அவரை 8 இடங்களில் கடித்துக் குதறியது... மற்ற ஊழியர்கள் இருவரும் பீதியில் உறைந்து போயினர்... அந்த சமயத்தில் திரும்பி வந்த மணிகண்டன், நாய் ஜெகதீஷை கடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ஓடிச் சென்று நாயைப் பிடித்து வீட்டுக்குள் அடைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்