பாதை தெரியாத அளவு மூடிய பனி.. - மலை பாதையில் வாகன ஓட்டிகள்.. திக்..திக்..
- கொடைக்கானலில் அடர்ந்த பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது... இதனால் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது... குறிப்பாக பேருந்து நிலையம், அண்ணாசாலை, லாஸ்காட் சாலை, கோக்கர்ஸ்வாக் சாலை, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, கல்லறை மேடு, உகார்த்தே நகர், பிலீஸ்வில்லா, கவி தியாகராஜர் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலும், வத்தலகுண்டு , பழனி பிரதான மலை சாலைகளிலும் அடர்ந்த பனி மூட்டம் தொடர்ந்து நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி மலை சாலையில் ஊர்ந்து ஊர்ந்து சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர்...