பள்ளிக்குள் புகுந்து மாணவனை கடித்த வெறி நாய்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம் | Karur

Update: 2024-12-20 02:22 GMT

கரூர், வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 8ஆம் வகுப்பு படிக்கும் தரணீஸ் என்ற மாணவனை, பள்ளி வளாகத்தில் புகுந்த வெறி நாய் ஒன்று கடித்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டது.

இதனை பார்த்த ஆசிரியர்கள் மாணவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பள்ளியின் அருகில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்த அஞ்சனா என்கிற இரண்டரை வயது சிறுமியையும், அந்த தெருவில் ஒரு வளர்ப்பு நாயையும் அந்த வெறி நாய் கடித்து விட்டு ஓடியுள்ளது.

வெங்கடேஷ் என்பவர் வீட்டின் முன்பு அமர்ந்திருந்தபோது, அவரையும் அந்த நாய் கடிக்க பாய்ந்துள்ளது. அவர் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியின் பிளாஸ்டிக் மூடியை எடுத்து தடுத்ததால், நாய் மூடியை கடித்து விட்டு தப்பியோடி விட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் வெறி நாயை தேடி பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்