கரூர் அருகே ரவுடி தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பவர் பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இருந்துள்ளார். இன்று கிருஷ்ணராயபுரத்தை அடுத்த மேட்டு மகாதானபுரம் இரட்டை வாய்க்கால் அருகே, காளிதாஸ் தலை துண்டிக்கப்பட்டநிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றிய நிலையில், தலையை தேடி வருகின்றனர். மேலும், கொலைக்கான காரணம் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.