பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை - கிழவனுக்கு கோர்ட் கொடுத்த அதிரடி தீர்ப்பு | POCSO
காரைக்காலில் ஐந்து வயது மற்றும் ஆறு வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், 55 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டில் முகமது சுல்தான் இப்ராஹிம் என்பவர், தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமிகளுக்கு மதுபோதையில் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இவரை அக்கம்பக்கத்தினர் பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில், தற்போது இவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.