#JUSTUN || திடீரென வந்த ராட்சத அலை சிக்கி பலியான 2 மாணவர்கள்.. காரைக்காலில் அதிர்ச்சி
சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமத
காரைக்கால் கடலில் குளித்த இரண்டு சிறுவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழப்பு : சிறுமி ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்டு சிகிச்சை : உடலைக் கண்டு பெற்றோர்கள் கதறி அழுத சோகம்:
இங்கு விடுமுறை நாட்களில் உள்ளூர்வாசிகளுடன் நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
மேலும் கடந்த ஓராண்டில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் கடலில் குளிப்பதற்கு காவல்துறை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தடையை மீறி பலர் கடலில் குளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இரவு காரைக்கால் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடத்திற்காக நாகப்பட்டினம் மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இன்று அதிகாலை முதல் கடற்கரையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மாலை கடற்கரையில் கடல் அலையில் சுற்றுலா பயணிகள் குளித்து வந்தனர்.
அப்போது நாகப்பட்டினத்தை சேர்ந்த சாலையோர உணவு கடை நடத்திவரும் சிவகுமார் என்பவர் தனது மனைவி பாண்டியம்மாள் மகன் ஸ்ரீ விஷ்ணு17 மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் காரைக்கால் கடற்கரைக்கு வந்திருந்தார்.
இதேபோல் காரைக்கால் சமத்துவபுரம் பகுதி சேர்ந்த கட்டிட தொழிலாளி ரமேஷ் மகன்12 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் நிஷின் ராஜ் உடன் காரைக்கால் கடற்கரைக்கு வந்திருந்தார்.
சிறுவர்கள் அனைவரும் கடலில் குளித்துக் கொண்டிருந்த பொழுது திடீரென ஏற்பட்ட ராட்சச அறையில் சிக்கி இழுத்து செல்லப்பட்டனர். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவர்களை மீட்க முயற்சி செய்தனர் இதில் சிறுவர்கள் விஷ்ணு, நிஷின் ராஜ் மாயமான நிலையில் சிறுமி பிரியதர்ஷினி ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். மீட்கப்பட்ட சிறுமி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிறுவர்களை தேடி வந்தனர்.
காரைக்கால் கருக்கலாச்சேரி மீன்பிடி துறைமுகம் பகுதியில் சிறுவன் விஷ்ணு உடல் சடலமாக கரை ஒதுங்கியது. இதேபோல் நிஷின் ராஜ் உடல் துறை முக முகத்துவாரம் பகுதியில் கரை ஒதுங்கியது. உயிரிழந்த இரண்டு சிறுவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் காரைக்கால் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லெட்சுமி சௌஜன்யா சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். உயிரிழந்த விஷ்ணுவின் உடலைக் கண்டு அவரின் தாய் கதறி அழுதது அங்குள்ளர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. இதே போல் அரசு மருத்துவமனையில் நிஷின் ராஜ் உடலை கண்டு அவர்கள் பெற்றோர் தலையில் அடித்து அழுது கொண்டது அங்கு உள்ளவர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. புத்தாண்டு கொண்டாட வந்த இடத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த மாதம் தஞ்சாவூர் மாவட்ட சேர்ந்த இளைஞர் ஒருவர் இதே கடலில் குளித்து உயிரிழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.