`ஒருநாள்' கலெக்டரான 4 அரசு பள்ளி மாணவர்கள்..! - ஆட்சியர் சொன்ன வார்த்தை - காரைக்காலில் நெகிழ்ச்சி
காரைக்காலில் ஒரே நாளில் 4 அரசு பள்ளி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றனர். மாணவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகளை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையிலும், எதிர்காலத்தில் சிறந்த குடிமக்களாக விளங்கவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்ற காரைக்கால் ஆட்சியர் மணிகண்டன் வாய்ப்பு அளித்து வருகிறார். அந்த வகையில் இன்று ஒரே நாளில் 9ம் வகுப்பு படிக்கும் 4 அரசு பள்ளி மாணவர்கள் ஒரு நாள் ஆட்சியராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அப்துல் அகமது, மகேஷ், பிரேமலதா, ஜீவா ஆகிய 4 மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து ஒரு நாள் ஆட்சியராக பொறுப்பேற்றனர். ஆட்சியர் மணிகண்டன் மாணவர்களை வரவேற்று கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடினார். ஆட்சியர் மணிகண்டன் கலந்து கொள்ளும் ஆய்வு கூட்டம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆட்சியர் வாகனத்தில் சென்று மாணவர்கள் பங்கேற்றனர்.