குமரியில் அதிரடி வேட்டையில் இறங்கிய அதிகாரிகள்.. கையும் களவுமாக சிக்கிய ஹோட்டல்கள்.. வெளியான வீடியோ

Update: 2024-11-09 16:23 GMT

கன்னியாகுமரி மற்றும் விவேகானந்தபுரம் பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் தீங்கு விளைவிக்கும் உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.உணவகம் ஒன்றின் குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப் பட்டிருந்த பழைய இறைச்சி, காலையில் சமைத்து பயன் படுத்திய பின் மீதமான சாம்பார், சட்னி, குருமா , அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை, பஜ்ஜி, சமோசா,பூரி உட்பட சுமார் 20 கிலோ உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டன. அதிகாரிகள் உணவக ஊழியர்களிடம் எச்சரிக்கை செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது. விதிமுறைகள் மீறல்களுக்காக இரண்டு உணவகங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்