குமரியை நடுநடுங்க வைத்த சிசிடிவி.. ஓரமாக நின்று வேடிக்கை பார்த்த மக்கள்

Update: 2024-12-29 03:05 GMT

கன்னியாகுமரி மாவட்டம் எட்டாமடை பகுதியில் இளைஞர் ஒருவரை கத்தியுடன் இருக்கும் நபர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். இவரை கத்தியுடன் இருக்கும் மற்றொரு நபர் கடந்த 21ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் அதிகம் இருக்கும் எட்டாமடை தேவாலயம் முன்பு நடைபெற்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளுடன் பாதிக்கப்பட்ட பிரதீப், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரதீப்பை தடிக்காரன் கோணம் பகுதியை சேர்ந்த மினிஷான் மற்றும் பால் குளத்தை சேர்ந்த சுபின் ஆகியோர் தாக்கியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்