காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தாலுகாவில் உள்ள 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்கள் இல்லையென மருத்துவர் ஒருவர் பேசும் வீடியோ வெளியாகி உள்ளது. அதில், 6 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், 14 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 5 மருத்துவர் மட்டுமே வேலை செய்வதால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மருத்துவர்கள் பற்றாக்குறை குறித்து மேலிடத்தில் தகவல் தெரிவித்து விட்டதாவும், விரைவில் செவிலியர்கள் பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.