பேங்க் லோன் வாங்கிய பெண் கதறோ கதறல்.. வெளியே சொல்ல முடியா அந்த மாதிரி டார்ச்சர் கொடுத்த மேனேஜர்

Update: 2024-11-17 07:30 GMT

நாகர்கோவில் செட்டிகுளம் சந்திப்பில் இயங்கி வரும் மகாவீர் தனியார் நிதி நிறுவனத்தில் பெண் ஒருவர் 16 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். தவணை முறையில் கடன் செலுத்தி வந்த நிலையில், இடையே 3 தவணைகள் கட்டாமல் விட்டதாக கூறப்படுகிறது. இதனால், நிதி நிறுவன மேலாளர் சரவணன் ஊழியர்களை வைத்து மிரட்டியதாகவும், வீடியோ கால் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம்சாட்டியுள்ள அந்த பெண், புகைப்படத்தை எடுத்து வைத்து வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் குமுறியுள்ளார். மேலும், நீதிமன்ற பெயரில் போலி பிடிவாரண்ட் தயாரித்தது தெரியவந்த நிலையில், நீதிபதி உத்தரவிட்டும் சரவணன் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்