VasoolRaja | சரிந்த வசூல் ராஜா - தெறித்தோடிய சில்வண்டுகள் - ரகசிய இடத்தில் 5 பேர் - அதிரும் காஞ்சி

Update: 2025-03-12 10:14 GMT

காஞ்சிபுரம் அருகே ரவுடி வசூல் ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்தின் பேரில் 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 5 பேரை பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருக்காலிமேடு பகுதியில் பட்டப்பகலில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி வசூல்ராஜா வெட்டி கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்