1976 வரை இந்தியாவிலேயே இல்லாத மலை... யாரும் அறியா கல்வராயன் மலை ரகசியம்! இது கள்ளச்சாராய மலை அல்ல

Update: 2024-07-03 09:14 GMT

1976 வரை இந்தியாவிலேயே இல்லாத மலை

யாரும் அறியா கல்வராயன் மலை ரகசியம்!

தமிழ்நாட்டிற்குள்ளேயே தனி ராஜ்யம்

இது ஒன்றும் கள்ளச்சாராய மலை அல்ல

கள்ளக்குறிச்சி என்றாலே கல்வராயன் மலையும்.. அங்கே கிடைக்கும் கள்ளச்சாராயமும் தான் இப்போதுள்ளவர்களுக்கு தெரியும். ஆனால் கம்பீரமான இந்த மலையும், அதன் பின்னணியும் பல வரலாற்றை கொண்டது... இதுவரை யாரும் அறிந்திராத பக்கத்தை உங்களுக்கு தருகிறது இந்த தொகுப்பு...

வெண்பஞ்சு மேகங்கள் தவழ்ந்து செல்ல...வெள்ளி நீரோடை வகிடெடுக்க...பச்சைப்போர்வை போர்த்தி தியானம் செய்யும் இந்தக் கல்வராயன் மலையின் அழகைக்காண கண்கோடி வேண்டும்...

கால்நடைகளை மேய்ப்பவர்கள் வாழ்ந்த பகுதி என்பதால் இது கல்வராயன் மலையானதாம்...

அதேபோல் கல்வராயன் என்பவர் ஆண்டதால் இது இப்பெயர் பெற்றதாகவும் கூறுவதுண்டு...

இங்கு வாழ்பவர்களை மலையாளிகள் என்று கூறுவதுண்டு...

இது தமிழ்நாட்டின் "ஏழைகளின் மலைப் பிரதேசம்"... பொதுவாக மலை என்றால் பாறைகளாகவே காட்சி தரும்.. ஆனால் இந்த மலையோ மரங்கள், மூலிகை செடிகள் சூழ கண்களை நிறைக்கிறது...

பெரும்பாலும் பேசப்படுவதைப் போல கல்வராயன் மலை ஒன்றும் கள்ளச்சாராய மலை அல்ல...

சின்னத் திருப்பதி எனப்படும் ஏழுமலையான் சன்னதி....கரியகோவில் நீர்த்தேக்கம்...கோமுகி அணை...அழகிய பூங்காக்கள்... மான்கொம்பு நீர்வீழ்ச்சி...மேகம்...பெரியார்... பண்ணியப்பாடி அருவிகள்...படகு குழாம்...என ஏகப்பட்ட சுற்றுலாத்தலங்களின் புகலிடம் தான் இந்தக் கல்வராயன் மலை...

கல்வராயன் மலை நமது எல்லையில் உள்ளது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த பெருமை...

1947ல் இந்தியாவுக்கு சுதந்திரம்...ஆனால் ஒன்று தெரியுமா?... 1976 வரை இந்தக் கல்வராயன் மலை இந்தியாவிலேயே கிடையாது... காரணம் என்ன?...

கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியான இந்த கல்வராயன் மலை என்பது வெறும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமல்ல...

சேலம், தருமபுரி,விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களும் இந்தக் கல்வராயன் மலையுடன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன...

சரி...இந்தியாவுக்குள் இணைவதற்கு முன் கல்வராயன்மலை தமிழ்நாட்டிற்குள்ளேயே தனித்தீவாக இருந்ததே... அந்தக் கதையைப் பார்க்கலாம்...

காஞ்சியைப் பூர்வீகமாகக் கொண்ட 3 பாளையக்காரர்கள் கல்வராயன்மலை நோக்கி வந்துள்ளனர்...

விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில்

சடைய கவுண்டர், குரும்ப கவுண்டர், ஆரிய கவுண்டர் ஆகிய மூவருக்கும் கல்வராயன்மலை தானமாக வழங்கப்படவே... அவர்கள் மலையை மூன்றாகப் பிரித்து ஆட்சி செய்துள்ளனர்...

இவர்களை ஜாகிர்தார்கள் என்று கூறுகின்றனர்...ஒவ்வொருவருக்கும் தலா 44 கிராமங்கள்...

சரி...இவர்கள் தங்கள் உணவுத் தேவையை எப்படி பூர்த்தி செய்து கொண்டனர்?...

சாலை வசதிகளையெல்லாம் மக்களே தான் பார்த்துக் கொள்ள வேண்டும்...மக்கள் தாங்களாகவே பாதை வெட்டுவார்கள்...தடம் போடுவார்களாம்..

விறகு வெட்ட, நெல் அறுக்கப் பயன்படும் அரிவாள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களுக்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது... விளைபொருள்களில் ஒரு பகுதி பாளையக்காரர்களின் வீடு சென்று சேர வேண்டுமாம்...

ஊரில் நல்லது கெட்டதைப் பார்த்துக் கொள்வது...பஞ்சாயத்து பேசுவது...போன்ற வேலைகளை ஜாகிர்தார்கள் கவனித்துக் கொண்டனராம்..

இருப்பதை வைத்துப் பிழைப்பு நடத்தி வந்துள்ளனர் கல்வராயன் மலைவாழ் மக்கள்...

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அந்த வம்சாவழியினரை பல்லக்கில் தூக்கிச் செல்லும் வழக்கமெல்லாம் பின்பற்றப்பட்டுள்ளது...

கிட்டத்தட்ட மன்னராட்சியைப் போலத்தான் இருந்துள்ளது... அதாவது வரலாறு பற்றிய சினிமாவில் நாம் பார்க்கும் காட்சிகள் எல்லாம் கல்வராயன் மலையில் நடந்திருக்கிறது..

இதெல்லாம் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் வரை மட்டுமே...

ஜமீன் ஒழிப்பு சட்டத்தின்படி 3 பாளையக்காரர்களின் குடும்பங்களும் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளை அரசிடம் கொடுத்து விட்டு சாதாரண மனிதர்களைப் போல் வாழத் துவங்கியுள்ளனர்...

இந்த ஜாகிர்தாரர்களின் வம்சாவழியினர் இன்றளவும் கல்வராயன் மலைப்பகுதியில் மக்களோடு மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்...

1976 வாக்கில் தான் இந்தக் கல்வராயன் மலை இந்தியாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது...

துவக்க காலங்களில் சுயராஜ்ஜியம்..சுய மரியாதையுடன் அப்பகுதி மக்களின் வாழ்வியல் முறை இருந்துள்ளது...

கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கான அவசியமும் அப்போது இருந்ததில்லை என்கிறார்கள் மன்னராட்சியிலும் இப்போதும் இருப்பவர்கள்...

1976க்கு முந்தைய கல்வராயன் மலையின் வரலாற்றை பார்த்தோம்.. அதன்பிறகு கல்வராயன்மலை கள்ளச்சாராய மலை என்று கூறும் நிலைக்குச் செல்லக் காரணம் என்ன?... பார்க்கலாம் மற்றொரு தொகுப்பில்...

Tags:    

மேலும் செய்திகள்