கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் இருந்து, பள்ளி ஆசிரியைகள் ஹரிப்பிரியா, கீர்த்திகா ஆகிய இருவரும் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் தாயார் செல்வி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன் விசாரணையில் வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் மற்றும் ஜென்ரல் டைரி ஆகியவற்றை மனுதாரருக்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, எப்.ஐ.ஆர் மற்றும் ஜெனரல் டைரி ஆகியவற்றை சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதேபோல அக்டோபர் மாதம் நடந்த விசாரணையில், மனுதாரர் கேட்ட தொலைபேசி உரையாடல் பதிவுகளை வழங்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தொடர்ந்து நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, உத்தரவுக்கு எதிராக ஆட்சேபனை மனுத்தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டு செல்வி மனுத்தாக்கல் செய்துள்ளார்.