"நீயா?.. நானா?.. ஒண்ணுமே பண்ண முடியாது" - போலீசார் முன் தகராறில் ஈடுபட்ட 2 கிராம மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கழிவுநீர் எடுத்து செல்வது தொடர்பாக இரு கிராம மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடுவனூர் கிராமத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீரை, ஊராட்சி சார்பில் அருகே உள்ள ஓடையில் கலக்க கிராம மக்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால், தங்கள் கிராமம் வழியாக கழிவுநீரை எடுத்து செல்ல மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அங்கு விரைந்த வந்த அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர்.