ஜல்லிக்கட்டு - 800 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்பு

Update: 2025-03-17 00:12 GMT
ஜல்லிக்கட்டு - 800 காளைகள், 250 வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் பெரிய குரும்பப்பட்டி காயாம்பு அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் அக்பர் அலி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 800 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளையும், அதனை தீரத்துடன் அடக்கிய மாடுபிடி வீரர்களை மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்