சாலை விபத்தில் மடியும் உயிர்கள்..அந்த நொடி நடப்பது என்ன?..மனதை நொறுக்கும் தத்ரூப காட்சி
திருப்பூரில் சாலை விதிகளை கடைப்பிடிப்பது தொடர்பாக மாநகர காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மற்றும் சென்னை கூத்துப்பட்டறை சார்பில் விழிப்புணர்வு நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில், செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்குதல், சாலை விதிகளை பின்பற்றாமல் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக, சாலை விபத்துக்களால் மனநிலை பாதிக்கப்பட்ட நபர் போல வேடம் அணிந்த ஒருவர், ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து, காலில் விழுந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும், சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பதன் மூலம் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படுவது குறித்தும் நாடகமாக அரங்கேற்றப்பட்டது.
Next Story