படித்தது 10-ஆம் வகுப்பு... பார்த்தது டாக்டர் வேலை - ஊரையே அதிர வைத்த ஒற்றை நபர் | Hosur
ஓசூரில், 10ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்த ஆந்திராவை சேர்ந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.
ராம்நகர் பகுதியில் மெகபூப் வலி என்பவர் மருத்துவம் படிக்காமல், மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவ துறையினருக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து மருத்துவ குழுவினர், ராம் நகரில் உள்ள கிளீனிக்கில் திடீரென ஆய்வு நடத்தினர்.அப்போது, மெகபூப் வலி 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு, மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட இவர், ஓசூரில் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொழிலை செய்து வருவதும், ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு போலி மருத்துவர் என கைது செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.