ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள நொகனூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் கூட்டத்தில் கிரி என்ற ஒற்றை யானை தனியாக சுற்றி வருகிறது. இந்த யானைக்கு சரியாக காது கேட்காது என கூறப்படுகிறது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கிரி யானை, தாவரக்கரை கிராம பகுதியில் விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி உள்ளிட்ட விளை பயிர்களை உண்டு சேதப்படுத்தியது. கிரி யானைக்கு காது கேட்காததால் வனத்துறையினர் நீண்ட நேரம் பட்டாசுகள் வெடித்தும் அந்த யானை நகராமல் அங்கே நின்றது. பின்னர் தொடர்ந்து பட்டாசுகளை வெடிக்க செய்து அந்த யானையை மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பினர்.